Vaarai Rathnam Song: கேட்கக்கேட்க வெறியாகுதே.. "வாராய் ரத்னம்" படத்தின் பாடல் வெளியீடு; வெறியோடு களமிறங்கும் விஷால்.!
மூன்றாவது முறையாக இணையும் விஷால் - ஹரி கூட்டணியும், ஆறாவது முறையாக இணையும் ஹரி - டிஎஸ்பி கூட்டணியும் 2024ம் ஆண்டில் வெற்றி நடைபோடும் என்பது சினிமா வட்டாரங்கள் கணக்காக இருக்கிறது.
ஜனவரி 01, சென்னை (Chennai): கார்த்திகேயன் சந்தானம் மற்றும் அலங்கார் பாண்டியன் ஆகியோரின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ரத்னம் (Rathnam). இப்படத்தில் நடிகர் விஷால் - ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக ஒன்றிணைந்துள்ளனர். முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் இருவருக்கும் மிகப்பெரிய மைல் கல்லாக இருந்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பின் இருவரும் ரத்னம் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
ரத்னம் படக்குழு: விஷாலுக்கு இது 34வது திரைப்படம் ஆகும். இப்படத்தில் நடிகர்களாக விஷால், ப்ரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைப்பு பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சுகுமாரும், எடிட்டிங் பணிகளை டி எஸ் ஜெய்-யும் கையாண்டுள்ளனர். Video Game Companies Layoff: ஒரு ஆண்டில் 9000 பேர் பணிநீக்கம்; வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனத்திலும் நடந்த அதிரடி மாற்றங்கள்.!
விஷால் - டிஎஸ்பி கூட்டணி: கடந்த ஜூலை மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஹரியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ஆறாவது முறையாக தற்போது இணைந்திருக்கின்றனர். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஆறு, சிங்கம், வேங்கை, சிங்கம் 2, சாமி ஸ்கொயர் ஆகிய படங்கள் இசையமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரத்னம் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
வாராய் ரத்னம் பாடல் வெளியீடு: இந்நிலையில், இன்று 'வாராய் ரத்தினம்' என்ற பாடலின் முதல் பார்வை வீடியோ வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டமாக இரண்டு நிமிடங்கள் கொண்ட பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேகாவின் வரிகளில், செண்பகராஜ் குரலில் பாடல் உருவாகி இருக்கிறது. ரத்னம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.