டிசம்பர் 31, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் அதிகரித்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செயலிகள் மற்றும் இயந்திரங்களின் பயன்பாடு காரணமாக, சாதாரண கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பணிநீக்கம் என்பது அடுத்தடுத்து பல ஊழியர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியது.
அதிரடி காண்பித்த எபிக் கேம்ஸ்: அந்த வகையில், நடப்பு ஆண்டில் மட்டும் ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களை, வீடியோ கேம் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் எபிக் கேம்ஸ் நிறுவனம் தனது 16 விழுக்காடு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து, 870 பேரை வீட்டுக்கு அனுப்பியது. Lorry Van Crash: வேன் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி.. லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் சோகம்.!
ஈஏ நிறுவனமும் 750 பேரை நீக்கியது: நவம்பர் மாதத்தில் உபிஷாப்ட் நிறுவனம் 124 பணியாளர்களை பணி நீக்கம் செய்திருந்தது. லார்ட் ஆப் ரிங்ஸ் கேமிங் நிறுவனம் பல்வேறு குளறுபடிகளில் சிக்கி 900 பேரை பணி நீக்கம் செய்திருந்தது. அஸ்பாரோ நிறுவனம் ஆயிரம் பேரையும், ஈஏ நிறுவனம் 750 பேரையும் பணிநீக்கம் செய்தது.
இவ்வாறாக வீடியோ கேமிங் சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் மொத்தமாக 9000 பேரை நடப்பு ஆண்டில் மட்டும் வேலையில் இருந்து நீக்கி இருந்தது.