Celebrities Watch FDFS: ஜெயிலர் படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்ப்பையும் தாண்டி மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வந்திருந்தனர்.
ஆகஸ்ட் 11, சென்னை (Cinema news): ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் நேற்று வெளியாகி உலக அளவில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில், கோலிவுட் பிரபலங்கள் பலரும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட ஷோவை காண ஆவலுடன் வந்திருந்தனர்.
சூப்பர் ஸ்டாரின் படத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் காண்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட பிரபலங்கள் பலரும் திரையரங்குகளுக்கு வந்திருந்தனர். Tenkasi women suicide: திருமணமாகி 25 நாட்களே ஆன புதுமணப்பெண் தற்கொலை: கல்நெஞ்சம் கொண்ட காவலரின் எண்ணத்தால் ஏற்பட்ட விபரீதம்.!
ரம்யா கிருஷ்ணன், அனிருத் ரவிச்சந்திரன், இயக்குனர் நெல்சன் மேலும் ஜெயிலர் படத்தின் மற்ற நட்சத்திரங்கள் சென்னையின் பிரபலமான திரையரங்கு ஒன்றில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ காண வந்திருந்தனர். இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்கும் ஆதரவும் குவிந்தது. படம் தொடங்குவதற்கு முன்பாக அனிருத் ‘ரஜினி அலப்பறை’ பாடலை பாடியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்தியது.
மேலும் படத்தின் நடுவில் நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்திற்கான சிறப்பு தோற்றத்துடன் வந்திருந்தார். ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜெயிலர் படத்திற்கான தனது எதிர்பார்ப்பை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் நிலையில் நேற்று அவரும் ஜெயிலர் படக்குழுவினருடன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ (FDFS) பார்க்க வந்திருந்தார்.