ஆகஸ்ட் 11, தென்காசி (Tenkasi): தென்காசி மாவட்டம் கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகள் குமுதாவுக்கும் ராயப்பநாடனுர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சனக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
சுதர்சன் சென்னையில் (Chennai) காவலராக பணிபுரிந்து வரும் நிலையில், சொந்த ஊரில் 25 நாட்கள் மனைவியுடன் குடும்பம் நடத்திவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார். புது வீடு பார்த்து விட்டு மனைவியை கூட்டிச் செல்வதாகக் கூறியுள்ளார். அதனால் குமுதா தாய் வீட்டில் வசித்து வந்தார்.
பின்னர் சுதர்சனை குமுதா செல்போனில் அழைத்து பேசியபோது அவர் வேறொரு பெண்ணை காதலிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் குமுதாவை பிடிக்கவில்லை என்று கூறி அவரிடம் பேசாமல் அழைப்புகளை நிராகரித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து குமுதா ஊர் பெரியவர்கள்,மகளிர் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு தரப்பில் சுதர்சன்மீது புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த புகார்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. No Confidence motion followed by fiery discussions: அனல் பறக்கும் விவாதங்களும், நாகரீகமற்ற செயல்பாடுகளும்.
சுதர்சன் காவல்துறையில் (TN Police) பணி புரிவதால் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. மேலும் எந்தவித பேச்சு வார்த்தையும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. அதைத்தொடர்ந்து நள்ளிரவில் சுதர்சனின் பெற்றோர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
பின்பு மறுநாள் சுதர்சன் மற்றொரு செல்போனிலிருந்து குமுதாவை அழைத்து கடுமையாக திட்டியுள்ளார். அதனால் விரக்தி அடைந்த குமுதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குமுதா மனநிலை சரியில்லாதவர் என்று சுதர்சன் புகார் அளித்திருப்பதாகவும் மேலும் குமுதாவின் வீட்டார் சுதர்சன் மீது ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிகிறது.
போலீசார் தக்கசமயத்தில் விசாரணைய மேற்கொண்டிருந்திருந்தால் அப்பா இல்லாத பெண்ணின் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்று குமுதாவின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.