Director Prakash Koleri Death: மலையாள திரைப்பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
கேரளாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானதாக தேடப்பட்டு வந்த பிரபல திரைப்பட இயக்குநர், வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 06, கேரளா (Kerala): கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கோலேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் கோலேரி (Prakash Koleri). இவருக்கு வயது 65. இவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 35 ஆண்டுகளாக மலையாள திரை உலகில் பணியாற்றி வந்துள்ளார். 1987ம் ஆண்டு வெளியான 'மிழிதளில் கண்ணீருமே' என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2004ம் ஆண்டு பிரகாஷ் கோலேரி அதன் பின்னர் திரைத்துறையில் படங்களை இயக்காவிட்டாலும் கூட, பாடல்கள் எழுதுவது, திரைக்கதை எழுதுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தார். Korea To Expand Baby Bonuses: குழந்தை பெற்றால் ரூ.62 லட்சம் போனஸ்... அதிரடியாக அறிவித்த நிறுவனம்..!
இவர் வயநாடு அருகே உள்ள பரப்பனங்காடி சாலையில் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனிடையே கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு பிரகாஷ் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே பிரகாஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கெனிச்சிரா காவல் துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.