Baby (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 15, சியோல் (Seoul): தென்கொரியாவில் (South Korea) பிறப்பு விகிதம் வேகமாக வளர்ந்து வருவது அந்நாட்டு அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென்கொரியாவில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென் கொரியாவின் மொத்த 51 மில்லியன் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் சியோலில் வாழ்கின்றனர், அங்கு கருவுறுதல் விகிதம் 2022 இல் 0.59 ஆக இருந்தது, சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, ஒட்டு மொத்த நாட்டின் பிறப்பு விகிதம், ஒப்பிடுகையில், அந்த ஆண்டு 0.78 ஆக இருந்தது. பல தென் கொரிய இளைஞர்கள், அதிகரித்து வரும் வீட்டுச் செலவுகள் மற்றும் சீராக உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றால் பயந்து, அவர்கள் பெரும்பாலும் நிதிக் கவலைகள் காரணமாக திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்பைத் தள்ளிப்போடுவதாகக் கூறுகின்றனர். Lucknow Palassio Mall Video: லக்னோ பலாசியோ மால் வீடியோ... நள்ளிரவு வரை குடித்துவிட்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த பெண்கள்..!

இதனால், பெண்கள் அதிக குழைந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்களையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 மில்லியன் வோன்களை குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் வோன் வழங்கப்படும்.

இந்த நிலையில் தென் கொரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக புதிய சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த கட்டுமான நிறுவனமான பூயங் குரூப் என்ற நிறுவனம் கூறியிருப்பதாவது, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாக தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ.62.3 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக அமையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.