Vetrimaaran Opens Up: அன்னபூரணி படத்திற்கு தடை.. கொந்தளித்த வெற்றிமாறன்..!
அன்னபூரணி பட விவகாரத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ஜனவரி 16, புதுடெல்லி (New Delhi): சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி (Annapoorani). இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா(Nayanthara) சமையல் கலையில் எவ்வாறு தேர்ந்து தனது கனவை வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை. Emmy Awards 2024: எம்மி விருதுகள் 2024... விருது வாங்கியவர்கள் யார்? முழு பட்டியல் இதோ..!
அன்னபூரணி படத்திற்கு தடை: இப்படத்தில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா அசைவ உணவுகளை சமைப்பதும் ருசித்து சாப்பிடுவதும் போன்ற காட்சிகளில் நடித்து இருப்பார். இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியான போது இந்த அளவு சர்ச்சைகள் எழவில்லை. ஆனால் இப்போது இந்த படமானது இந்திய அளவில் நெட்பிளிக்சில் ரிலீசான நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்காக அடி வாங்கி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தினை இயக்கிய ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக மன்னிப்பு கேட்டது. மேலும் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் அக்காட்சிகளை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தது. அது மட்டும் இன்றி அந்தக் காட்சிகளை நீக்கிய பிறகு நெட்பிளிக்சில் இப்படத்தினை பதிவிடுகிறோம் என்றும் தெரிவித்தது. தொடர்ந்து அன்னபூரணி படமானது நெட்பிளிக்சிலிருந்து (netflix) நீக்கப்பட்டது. Parking Dispute 4 Death: பார்க்கிங் தகராறில் படுபயங்கரம்: 4 பேர் கொடூரமாக கொலை.. திரைப்படத்தை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்.!
கொந்தளித்த வெற்றிமாறன்: இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுந்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.