அக்டோபர் 08, சென்னை (Chennai News): சமீப காலமாகவே திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், சோதனையை தொடர்ந்து அது புரளி என்பது தெரியவந்தது. இதே போல கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. Rajvir Jawanda Dies: பிரபல பஞ்சாபி பாடகர் ராஜ்வீர் ஜவாண்டா விபத்தில் சிக்கி மரணம்.. 11 நாட்கள் ஊசலாடி பிரிந்த உயிர்.. சோகத்தில் ரசிகர்கள்.!
நடிகை நயன்தாராவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:
இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தேனாம்பேட்டை காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபருக்கும் வலை வீசப்பட்டுள்ள நிலையில், வழக்கம்போல இதுவும் புரளி தான் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக படப்பிடிப்பில் இருக்கும் நயன்தாராவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.