Bihar Parking Dispute (Photo Credit: @piovijay X)

ஜனவரி 16, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் (Aurangabad) மாவட்டம், நபிநகர் பகுதியில் நேற்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் காரில் வந்து இருக்கின்றனர். அங்கிருந்த கடை ஒன்றின் முன்பு வாகனத்தை நிறுத்தி இருக்கின்றனர். அப்போது, கடையின் உரிமையாளர் காரை அங்கு நிறுத்த கூடாது என சொல்லியுள்ளார்.

அப்பாவி சுட்டுக்கொலை: இதனால் காரில் வந்த கும்பல் வாக்குவாதம் செய்ய, ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கும்பல் 65 வயதுடைய ராம்சரண் சௌகான் என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், காரை சுற்றிவளைத்து தாக்கினார்.

கிராமத்தினர் ஆத்திரம்: மேலும், காருக்குள் இருந்த நபர்களை பிடித்து கிராமமே அடித்து நொறுக்கியது. இந்த சம்பவத்தில் காருக்குள் இருந்த 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயத்துடன் மருத்துவமனையில் இருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். Car Collision: இரண்டு கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி., 4 பேர் காயம்.! நள்ளிரவில் நடந்த சோகம்.! 

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

காவல்துறை விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அவுரங்காபாத் காவல் துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருதரப்பு மோதல் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.

பார்க்கிங் திரைப்படத்தைப்போல சம்பவம்: சமீபத்தில் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம், வீட்டில் மேல்-கீழ் தளங்களில் வசித்து வரும் குடும்பத்தின் வாகன நிறுத்துமிட தகராறை மையப்படுத்தி வெளியானது. படத்தில் இறுதி சுபமாக முடிந்தாலும், நிஜத்தில் அது நடக்கவில்லை. பீகாரில் தற்போது நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம் பதறவைத்துள்ளது.