Kalki Beats Jawan: ஜவானின் வசூலை அடித்து தூக்கிய கல்கி.. நீண்ட நாள் பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய பிரபாஸ்..!
ஜவான் படத்தின் வசூலை தற்போது கல்கி 2898 AD திரைப்படம் முறியடித்துள்ளது.
ஆகஸ்ட் 08, சென்னை (Cinema News): இயக்குநர் ராஜமெளலி (SS Rajamouli) இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாகுபலி’ (Baahubali). பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்த இத்திரைப்படம் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ஈட்டியது. இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். மேலும் இந்த படம் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமல்ல உலக அளவில் அதிக வசூலை குவித்த படமும் ஆகும். இந்த படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியவர் தான் பிரபாஸ் (Prabhas).
கல்கி 2898 ஏடி: தொடர்ந்து பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி (Kalki 2898 AD) திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்கி திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவான நிலையில், முதல் பாகம் கடந்த மாதம் 27ம் தேதி ரிலீஸானது. இப்போது வரை இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Annapoorani OTT Release: சர்ச்சைக்குள்ளான நயன்தாராவின் அன்னபூரணி.. மீண்டும் ஓடிடி தளத்தில் ரிலீஸ்.. விபரம் உள்ளே..!
ஜவான்: இந்நிலையில் கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் சாதனைப் படைத்த ஷாருக் கானின் ‘ஜவான்’ படம் இந்தியாவில் செய்த வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஜவான் திரைப்படம் தன் வாழ்நாளில் இந்தியாவில் 760 கோடி ரூபாய் வசூலித்ததது. கல்கி அதை 40 நாட்களில் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் (Shah Rukh Khan) நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான் (Jawan). இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.