Annapoorani (Photo Credit: @LetsXOtt X)

ஆகஸ்ட் 08, சென்னை (Cinema News): நடிகை நயன்தாராவின் 75வது படமாக கடந்த ஆண்டில் திரையரங்குகளில் ரிலீசான படம் தான் அன்னபூரணி (Annapoorani). இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா (Nayanthara) சமையல் கலையில் எவ்வாறு தேர்ந்து தனது கனவை வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

அன்னபூரணி படத்திற்கு தடை: இப்படத்தில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா அசைவ உணவுகளை சமைப்பதும் ருசித்து சாப்பிடுவதும் போன்ற காட்சிகளில் நடித்து இருப்பார். இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சர்ச்சையில் சிக்கினார். இப்படம் தியேட்டரில் வெளியான போது சர்ச்சைகள் எழவில்லை. ஆனால் இந்திய அளவில் நெட்பிளிக்சில் ரிலீசான போது, பல்வேறு சர்ச்சைகளுக்காக அடி வாங்கியது. தொடர்ந்து இப்படத்தினை இயக்கிய ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக மன்னிப்பு கேட்டது. மேலும் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் அக்காட்சிகளை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தது. அது மட்டும் இன்றி அந்தக் காட்சிகளை நீக்கிய பிறகு நெட்பிளிக்சில் இப்படத்தினை பதிவிடுகிறோம் என்றும் தெரிவித்தது. தொடர்ந்து அன்னபூரணி படமானது நெட்பிளிக்சிலிருந்து (Netflix) நீக்கப்பட்டது. Kamal Haasan Quits Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்.. உண்மை காரணம் என்ன?!

மீண்டும் ரிலீஸ்: மேலும் நடிகை நயன்தாரா எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் அன்னபூரணி திரைப்படம் எடுக்கவில்லை என மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நாளை முதல் மீண்டும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அன்னபூரணி வெளியாகவுள்ளதாக ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் ரசிகர்களுக்கு காண கிடைக்கும் என்றும் மத உணர்வுகளை புண்படுத்துவதாக விமர்சனங்களை எழுப்பிய காட்சிகள் நீக்கப்பட்டு இந்திய ரசிகர்களின் பார்வைக்கும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.