Nayanthara Opens Up: அன்னபூரணி படத்திற்கு தடை.. அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர்ஸ்டார்..!
அன்னபூரணி படத்திற்கு தடை விதித்ததையொட்டி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 19, புதுடெல்லி (New Delhi): சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி (Annapoorani). இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா(Nayanthara) சமையல் கலையில் எவ்வாறு தேர்ந்து தனது கனவை வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
அன்னபூரணி படத்திற்கு தடை: இப்படத்தில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா அசைவ உணவுகளை சமைப்பதும் ருசித்து சாப்பிடுவதும் போன்ற காட்சிகளில் நடித்து இருப்பார். இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியான போது இந்த அளவு சர்ச்சைகள் எழவில்லை. ஆனால் இப்போது இந்த படமானது இந்திய அளவில் நெட்பிளிக்சில் ரிலீசான நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்காக அடி வாங்கி வருகிறது. Khelo India Youth Games 2023: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்... இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை.. 5 கட்ட பாதுகாப்பு போட்ட தமிழக அரசு..
இதனைத் தொடர்ந்து இப்படத்தினை இயக்கிய ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக மன்னிப்பு கேட்டது. மேலும் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் அக்காட்சிகளை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தது. அது மட்டும் இன்றி அந்தக் காட்சிகளை நீக்கிய பிறகு நெட்பிளிக்சில் இப்படத்தினை பதிவிடுகிறோம் என்றும் தெரிவித்தது. தொடர்ந்து அன்னபூரணி படமானது நெட்பிளிக்சிலிருந்து (netflix) நீக்கப்பட்டது.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அறிக்கை: தற்போது இதுக் குறித்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 'அன்னபூரணி' தி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். Steve Helps to Shamar: மேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கு உதவிய ஸ்டீவ் ஸ்மித்; அவிழ்ந்த காலணி கயிறுகளை சீராக்கி நெகிழ்ச்சி செயல்.!
அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உதவேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)