Khelo India Youth Games 2023 (Photo Credit: @TamilNaduInfra X)

ஜனவரி 19, சென்னை (Chennai): 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி இன்று முதல் ஜனவரி 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு டெமோ விளையாட்டாக இடம்பெற உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். Ocean Lifespaces India Raid: காலையிலேயே அதிரடி காட்டிய அமலாக்கத்துறை: சென்னையில் கட்டுமான தொழிலதிபர் வீடு & அலுவலகத்தில் திடீர் சோதனை.!

பிரதமர் மோடி தமிழகம் வருகை: கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகை வருகிறார். அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், தமிழக பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பின்னர் மறுநாள் ஜனவரி 20 திருச்சி செல்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து, பிரதமர் மோடி, ராமேசுவரம் செல்கிறார்.

அங்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார். பின்னர் ஜனவரி 21, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். Jai Sriram Slogan Drawing: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம்; 'ஜெய்ஸ்ரீராம்' மந்திரத்தில் கண்கவர் ஓவியம்.!

5 கட்ட பாதுகாப்பு போட்ட தமிழக அரசு: பிரதமர் வருகையையொட்டி, சென்னை மற்றும் திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பில் 22,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மாநகரில் ட்ரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.