
மே 23, ஹர்தோய் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஹர்தோய் (Hardoi) மாவட்டத்தில் உள்ள சிதாபூரை சேர்ந்தவர் அதுல் காஷ்யப். இவர், கடந்த 5 மாதங்களாக லோனார் காவல்நிலைய எல்லையில் உள்ள இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 21) இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் காதலன் அதுல் காஷ்யப்பை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். Bengaluru News: சூட்கேசில் சிறுமியின் உடல் மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!
வாலிபரை கட்டி வைத்து கொடூர தாக்குதல்:
இதனையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தினர், அதுலை நிர்வாணமாக்கி கயிறால் கட்டி வைத்து, கொடூரமாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். அதன்பின்னர், சுடுநீரை அவர்மீது ஊற்றி கொடுமை செய்துள்ளனர். மேலும், அவரது பிறப்புறுப்பில் கடுமையாக அடித்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.