Sivakarthikeyan Announces Birth Of Baby Boy: 3வது குழந்தைக்கு தந்தையான சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஜூன் 04, சென்னை (Cinema News): மாவீரன் மற்றும் அயலான் வெற்றியை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரித்துள்ள அமரன் (Amaran) படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் நகைச்சுவை பாணியில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஆனது இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு ஆகும். ஆனால் இது பயோபிக் படம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Stock Market Top Losers: வாக்கு எண்ணிக்கை எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை எதிர்பாராத வகையில் சரிவு..!
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சிவகார்த்திகேயன் 3 குழந்தைகளுக்கு தற்போது அப்பாவாக மாறியுள்ளார். ஜூன் 2ம் தேதி சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைவருக்கும் வணக்கம், எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி” என அறிவித்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.