Stock Market (Photo Credit: Pixabay)

ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 இந்தியா தேர்தல்கள் முடிவுகள் இன்று வெளியாகிறது. 14 சுற்றுகளாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் தகவலின் படி, பாஜக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 194 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வெளிவருவதால், இந்திய பங்குச்சந்தை (Stock Market) இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அதுவும் சென்செக்ஸ் குறியீடு (Sensex) சுமார் 2700 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. நிஃப்டி குறியீடு 661.40 புள்ளிகள் சரிந்து 22.602 புள்ளிகளை அடைந்துள்ளது. இதனால் சென்செக்ஸ் அதிகப்படியாக 73,659.29 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 22,566.95 புள்ளிகள் சரிந்துள்ளது. NASA Alert: பூமியை நோக்கி வரும் விண்கல்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

குறிப்பாக பொதுத்துறை வங்கி குறியீடுகள் 5 சதவீதம் சரிவுடன் தொடக்கத்தில் வர்த்தகமாகின. எல்&டி, ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் கோல் இந்தியா ஆகியவை அதிக நஷ்டமடைந்த நிறுவனங்களாக உள்ளன.