Actor Suriya Tribute To Vijayakanth: விஜயகாந்த் போல யாருமே இல்லை... கதறி அழுத சூர்யா..!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
ஜனவரி 05, சென்னை (Chennai): தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இறப்பு தமிழ்நாட்டையே உலுக்கியது. பல நடிகர்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் விஜயகாந்த் உடலை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மேலும் விஜயகாந்த் மறைந்தபோது திரை பிரபலங்கள் பலரும் வெளிநாடுகளில் இருந்தனர். அதனால் வீடியோ பதிவிட்டு அவர்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர். Realme 12 Pro Mobile: அசத்தலான மொபைலை வெளியிடும் ரியல்மி... அதிலுள்ள சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
கதறி அழுத சூர்யா: இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய சூர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று, கண்ணீர் மல்க விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். தற்போது சூர்யா கதறி அழுத வீடியோ இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. மேலும் அப்போது சூர்யா சில செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசியதாவது, "அண்ணனின் பிரிவு மிகவும் துயரமானது. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்த பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணனைப் போல யாருமே இல்லை. இறுதியாக அவரது முகத்தை பார்க்கக்கூட முடியாதது எனக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. எப்போதும் அவரை நினைவு இருக்கும். அப்பாவுக்காக வேண்டிக்கொண்டு எட்டு வருடங்கள் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். இதை கவனித்த விஜயகாந்த், நீ நடிகன். உடம்பில் சக்தி வேணும். வேற ஏதாவது வேண்டுதல் வைத்துக்கொள் எனக்கூறி அவர் தட்டிலிருந்த உணவை ஊட்டிவிட்டார். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்தின் பெயரை வைப்பதில் அவருக்கு சம்மதம். விஜயகாந்த் நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர்" என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.