Thangalaan Movie Review: "தங்க முலாம் பூசப்பட்ட செங்கலே தங்கலான்" - திரைப்பட விமர்சனம் இதோ.!

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது.

Thangalaan Movie Review (Photo Credit: LatestLY)

ஆகஸ்ட் 16, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த ஆறு மாதம் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன. சமீபத்தில், கமல் நடித்த இந்தியன் 2, ராயன் படம் வெளியான. அந்த வகையில் இன்று சுதந்திர தினம் விடுமுறை என்பதால் நேற்றைய நாளில் புதிய திரைப்படங்கள் (Aug 15th Release Tamil Movies) சில வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று தங்கலான் படம் வெளியானது. அப்படத்தின் முழுவிமர்சனத்தை இப்பதிவில் காணலாம்.

தங்கலான் (Thangalaan): நடிகர் விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் (Thangalaan) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. Independence Day Releases: இன்று திரையரங்குகளில் வெளியான படங்கள்.. விடுமுறையை கொண்டாடுங்கள்..!

படத்தின் கதை: தங்கலான் படமானது 1800களில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். அதாவது இந்தியாவின் கோலார் பகுதியில் தங்கம் இருப்பதாக கேள்விப்படும் பிரிட்டிஷ் ஜெனரல் கிளெமென்ட், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கொண்டு, தங்கத்தை எடுக்கச் செல்கிறார். ஆனால் அங்குள்ள ஆரத்தி பேய், தங்கத்தினைக் காத்து வரும் நிலையில், அவர்கள் தங்கத்தினை கண்டுபிடித்து எடுப்பார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. கோலார் தங்கவயலை அடிப்படையாகக் கொண்டு, அதனோடு தொன்மத்தையும் சேர்த்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாசிட்டிவ்: இதில், ஆரத்தி என்னும் சூனியக்காரி ஆக வருகிறார், மாளவிகா மோகனன். இவரை தடுக்கும் தங்கலானாக வருகிறார், விக்ரம். இந்தப் படத்தில் உலகத் தரம் வாய்ந்த நடிப்பினை நடிகர் விக்ரம் வெளிப்படுத்தி இருந்தார். பார்வதி, பசுபதி, மாளவிகா என அனைவரும் மெனக்கெட்டு இந்த படத்தில் நடித்து இருப்பதை நாம் காணலாம்‌. மேலும் கூறக்கூடிய மக்களின் பல இசைக்கருவிகளை ஒன்றிணைத்து ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். உடைகள், கலை, கேமரா அனைத்தும் பக்காவாக இருந்தது. பல படங்களில் புதிய ஆடைக்கு அழுக்கு ஒட்டியது போன்று உண்மைத் தன்மை இல்லாமல் போலியாக தெரியும். ஆனால் அந்த விஷயத்தில் இப்படம் தப்பித்துள்ளது.

கரைப் படிந்த ஆடைகள், கிழிந்த துணிகள், அக்குள் வியர்வையுடன் பெண்கள் அணியும் மேற்சட்டைகள் என பக்காவாக அனைத்தையும் செய்திருந்தனர். அதே நேரம் மேக்கப் பையும் நாம் பாராட்டியாக வேண்டும். கரைப் படிந்த பற்கள், வெயிலில் ஏற்பட்ட கருமை என அழகாக காட்டிருந்தனர். ஆனால் சில இடங்களில் பார்வதி மற்றும் விக்ரமின் கருமை நிறம் மற்றவர்களை விட சற்று குறைவாகவே இருந்ததை பார்க்க முடிந்தது. சில இடங்களில் அதிகயாக கருமை நிறத்தில் காட்டப்பட்டிருந்த விக்ரம், மற்றொரு காட்சியில் அவரின் முதுகு மட்டும் டானில்லாமல் காணப்படுகிறது. Sivakarthikeyan's 'Amaran' Independence Day Special: போர் செல்லும் வீரன்.. தேசபக்தி பாடலுடன் வெளியான அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ..!

மைனஸ்: ரஞ்சித் படங்களில் வசனங்கள் எப்போதும் பேரிடியாக இருக்கும். ஆனால் இதிலோ கதாபாத்திரங்கள் மாறுபட்ட தொன்மை தமிழை பேசுகின்றனர். அதனால் படத்தைப் புரிந்துகொள்வதில் பலர்க்கு சிக்கல் உள்ளது. படத்தில் உள்ள செய்யுள் தமிழை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துவதாலோ என்னவோ, நம்மால் உணர்ச்சி பூர்வமாக படத்துடன் இணைய முடியாமல் போகிறது. மேலும் படத்தில் சில வசனங்கள் கேட்கவே இல்லை.

பீரியட் டிராமா, ஃபேண்டசி, ஹாலூசினேசன், மக்கள் அரசியல் என பலவற்றை பேசினாலும், ஆழமான புரிதல் இல்லாமல் மேம்போக்காக எடுத்தது போன்று உள்ளது. பல எமோஷனல் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும், அது எதுவும் காண்போருக்கு அவ்வளவு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. கடைசியில் கிளைமேக்ஸில் சியான் விக்ரம் யார் என சொல்லப்படும் இடமும் பெரிதளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. ஹாலிவுட்டில் வெளியான அப்போகலிப்டா படம் போன்று தமிழில் எடுக்க ஒரு பெரும் முயற்சியாக அமைந்ததே தங்கலான்.

சேது, ஐ போன்ற படங்களில் மெனக்கட்டு உலகத்தரம் வாய்ந்த நடிப்பை கொடுத்த விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. உலக நடிகர்களுக்குச் சவால் விடும் படியான நடிப்பை அசால்ட்டாக வெளிப்படுத்திய, விக்ரமுக்கு மீண்டும் ஒருமுறை விருதுகள் நிச்சயம் என்று பலரும் கூறி வருகின்றனர். தங்க வேட்டைக்கு முன் இருந்த சுவாரசியம் தங்க வேட்டைக்குப் பின் குறைவாக இருப்பது மட்டும் சற்று மைனஸ் ஆக இருந்தாலும், விக்ரமின் நடிப்புக்காக இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கலாம்.

மொத்தத்தில் தங்கலான் என்பது வெறும் தங்கமுலாம் பூசப்பட்ட செங்கல் ஆகவே அமைந்துள்ளது.