Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் செய்த அட்டகாசம்.. காவல் துறையினரால் அதிரடி கைது..!

மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளரை தாக்கிய பின்னணி பாடகர் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Velmurugan (Photo Credit: @mahajournalist X)

மே 13, சென்னை (Chennai): சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற "மதுரை குலுங்க" என்ற பாடல் மூலமாக பாடகராக அறிமுகம் ஆனவர் வேல்முருகன் (Singer Velmurugan). டிவி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கலந்து கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், நேற்று இரவு 11 மணிக்கு வேல்முருகன் காரில் வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் சென்றுள்ளார். மெட்ரோ ரயில் பணிக்காக விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் நிறுத்தம் அருகே பேரிகாட் போட்டு ஒருவழிப்பதையாக மாற்றப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். Rural Agriculture Training: கிராமப்புற வேளாண்மை பயிற்சி.. உயிர் உரங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்..!

இதனால் பேரிகார்டை விலக்கி விட்டு அந்த வழியாக செல்ல வேல்முருகன் முயன்றுள்ளார். அப்போது, அங்கு பணியிலிருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் துணை மேலாளர் வடிவேலு என்பவர் பாடகர் வேல்முருகனின் செயலை கண்டித்துள்ளார். இதனால் வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது வேல்முருகன் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபல பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்தனர்.