மே 13, சேலம் (Salem News): பிஜிஸ் வேளாண்மை அறிவியல் கல்லூரி பனமரத்துப்பட்டி வட்டத்தில் கிராமப்புற வேளாண்மை (Rural Agriculture) பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகள் அதன் ஒரு பகுதியாக சாமுகுட்டப்பட்டி புது மாரியம்மன் கோயில் கிராமத்தில் உயிரி உரங்களைப் பற்றிய செயல்முறை விளக்கத்தை விவசாயிகளிடம் செய்து காட்டினர். உயிரி உரங்கள் விவசாயத்தில் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. TN 11th Result 2024: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது.? எப்படி பார்ப்பது?.. முழு விபரம் இதோ.!

இவ்வுயிரி உரங்களை மூன்று வகையாகப் பயன்படுத்தலாம் விதை நேர்த்தி செய்தல், நேரடியாக மண்ணில் கலந்து உரமிடுதல் மற்றும் பாசன நீரில் கலந்து உரமிடுதல் இவை பல்வேறு நுண்ணுயிர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயிருக்கு பயன்படும். அசோஸ்பைரில்லம் என்ற உயிரி உரத்தை நெல்லில் விதை நேரத்திக்காக பயன்படுத்தலாம். திரவ நிலையில் இருக்கும் இந்த உயிரி உரத்தை ஒரு கிலோ விதைக்கு 6 மில்லி என்ற அளவில் எடுத்து தேவையான அளவு நீர் கலந்து முப்பது நிமிடம் ஊற வைத்த பின் 24 மணி நேரம் உலர வைத்து பயிரிடலாம். இதன் மூலம் விதை நன்றாக முளைத்து வளருவதுடன் பூஞ்சை நோய்களும் பயிருக்கு வராது என்று மக்களுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.