Ra Sankaran Death: பிரபல இயக்குநர் ரா.சங்கரன் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரைத்துறை..!
சங்கரன் இன்று காலை வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார்.
டிசம்பர் 14, சென்னை (Chennai): சென்னையில் இன்று, பிரபல நடிகரும், பழம்பெரும் இயக்குநருமான ரா.சங்கரன் (Ra Sankaran) இன்று காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், இயக்குநருமான ரா. சங்கரனுக்கு வயது 92. மௌன ராகம் திரைப்படத்தில் சந்திரமௌலி கதாபாத்திரத்தில் நடித்து, இன்றளவிலும் ரசிகர்களின் இதயங்கள் நிறைந்திருப்பவர் தான் சங்கரன். இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் குருநாதரும் ஆவார். மேலும் 'ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு', 'அழகர் சாமி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். Namakkal Child Died: பெற்றோருக்கு பயந்து விபத்தில் சிக்கியதை மறைத்த சிறுவன் பரிதாப பலி: பெற்றோர்களே உஷாராக இருங்கள்.!
இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார். மேலும் இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.