மார்ச் 26, சென்னை (Cinema News): தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா (வயது48), மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) உயிரிழந்தார். இவர், 1999ஆம் ஆண்டு வெளியான 'தாஜ் மஹால்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இதனைத் தொடர்ந்து, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி என பல படங்களில் நடித்தார். கடைசியாக விருமன் என்ற படத்தில் நடித்திருந்தார். PR04 Movie Update: பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் என்ன? அசத்தல் அப்டேட் இதோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நடிகர் மனோஜ் பாரதிராஜா மரணம்:
மலையாள நடிகை நந்தனாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் அவரை 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மதிவதனி, அர்த்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன. தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்த மனோஜுக்கு (Actor Manoj Bharathiraja), கடந்த சில நாட்களுக்கு முன் இருதய பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
பிரபலங்கள் இரங்கல்:
இந்நிலையில், மாரடைப்புக் காரணமாக நேற்று அவர் திடீரென மரணமடைந்தார். அவர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல், சென்னை சேத்துபட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.