Bharathiraja Celebrates Birthday July 2024 (Photo Credit: @kayaldevaraj X)

மார்ச் 26, நீலாங்கரை (Cinema News): தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இயக்குனராக வலம்வந்த பாரதிராஜா (Bharathiraja), தனது மகனை தாஜ் மஹால் (Taj Mahal) என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இருந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் நடிப்பில் வெளியான சமுத்திரம், காதல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம், அன்னக்கொடி, பேபி, மாநாடு, விருமன் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். மனோஜின் நடிப்பில் வெளியான தாஜ்மஹால் திரைப்படம், இன்று வரை பலராலும் மறக்க முடியாத படமாக இருக்கிறது. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2005 வரை முன்னணி நடிகராக இருந்தவர், பின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2015 முதல் தற்போது வரை ஒருசில படங்களில் நடித்து வந்தார். PR04 Movie Update: பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் என்ன? அசத்தல் அப்டேட் இதோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பிறந்தநாள் வீடியோ வைரல்:

கடந்த 2006ம் ஆண்டு மனோஜ் பாரதிராஜா, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த நடிகை நந்தனாவை (Nandana) திருமணம் செய்துகொண்டார். தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மனோஜ் பாரதிராஜா, கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இதனிடையே, நேற்று (25 மார்ச் 2025) மனோஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கடந்த 2024 ஜூலை மாதம், குடும்பத்தினருடன் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜா இணைந்து, பாரதிராஜாவின் பிறந்தநாளை சிறப்பித்த நிகழ்வு நடந்தது. இதன் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Vadivelu Visits Keezhadi Site: "தாய்மொழிக்கே முக்கியத்துவம், பிற மொழியெல்லாம்" - தனது ஸ்டைலில் ட்விஸ்ட் வைத்த வைகைப்புயல் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா? 

இயக்குனர் பாரதிராஜாவின் (Director BharathiRaja) பிறந்தநாளை குடும்பத்தினர் சிறப்பித்த காணொளி:

நடிகர் சூர்யா பாரதிராஜாவின் மகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்த காட்சி: