மார்ச் 26, நீலாங்கரை (Cinema News): தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இயக்குனராக வலம்வந்த பாரதிராஜா (Bharathiraja), தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை (Manoj Bharathiraja) தாஜ் மஹால் (Taj Mahal) என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இருந்தார். அதனைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்த மனோஜ், திருமணத்துக்கு பின்னர் திரையுலகுக்கு இடைவெளி விட்டு இருந்தார். இதனிடையே, இதயம் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த மனோஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரிய அளவில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. Manoj Bharathiraja: தந்தையின் பிறந்தநாளை குடும்பத்துடன் சிறப்பித்த மனோஜ்; வைரலாகும் வீடியோ.!
வைரமுத்து இரங்கல் பதிவு:
இந்நிலையில், மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் அறிமுக திரைப்படமான தாஜ்மஹால் படத்தில், முதல் பாடல் இன்று வரை பிரபலமாக இருக்கிறது. இப்பாடலை கவிஞர் வைரமுத்து மனோஜ் மற்றும் பாரதிராஜாவுக்காக எழுதி இருந்தார். இந்த விஷயத்தை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ள வைரமுத்து, தனது எக்ஸ் வலைப்பதிவில் இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைரமுத்துவின் ட்விட் பதிவு பின்வருமாறு.,
மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன் செய்யக்
கடமைப்பட்டவனே!
உனக்கு நான் கடன்செய்வது
காலத்தின் கொடுமைடா" என்று
தகப்பனைத் தவிக்கவிட்டுத்
தங்கமே இறந்துவிட்டாயா?
உன் கலைக் கனவுகள்
கலைந்து விட்டனவா?
முதுமை - மரணம் இரண்டும்
காலத்தின் கட்டாயம்தான்.
ஆனால், முதுமை
வயதுபார்த்து வருகிறது;
மரணம் வயதுபார்த்து
வருவதில்லை
சாவுக்குக் கண்ணில்லை
எங்கள் உறக்கத்தைக்
கெடுத்துவிட்டவனே!
உன் உயிரேனும்
அமைதியில் உறங்கட்டும்
மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்து வைரமுத்து பதிவு செய்த வலைப்பதிவு:
மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன்… pic.twitter.com/ngB7b1Crel
— வைரமுத்து (@Vairamuthu) March 26, 2025