Victim Lalu Nizar | Death File (Photo Credit: Facebook / Pixabay)

டிசம்பர் 14, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், அக்ரஹாரம் பகுதியை சார்ந்தவர் மகபூபாஷா. இவருக்கு 8 வயதுடைய லாலு நிசார் என்ற மகன் இருக்கிறார். சிறுவன் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி தனது பெரியப்பாவின் வீட்டிற்கு செல்வதற்கு சிறுவன் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த இரு சக்கர வாகனம் சிறுவனின் மீது மோதியதாக தெரிய வருகிறது.

விபத்தில் சிக்கிய சிறுவன்: இதனையடுத்து, சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தி அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைக்கவில்லை. சிறுவனின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. வீட்டிற்கு சென்ற சிறுவன் விபத்தில் சிக்கியது தெரிந்தால் பெற்றோர் நம்மை திட்டுவார்கள் என்று பயந்து, விபத்தில் சிக்கியது குறித்து தெரிவிக்காமல் இருந்துள்ளார். Salem Shocker: குடிக்க பணம் கேட்ட தகராறில் நண்பன் கொலை: நோய் சரியாகத்தால் தாக்கப்பட்ட மருத்துவர்.. சேலத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள்.! 

திடீர் உடல்நலக்குறைவு: இதனிடையே, மறுநாளில் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியடைந்து மகனை மீட்ட குடும்பத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், சிறுவன் விபத்தில் சிக்கியது அவனின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் என்ன?: சிறுவனின் மரணத்திற்கான உரிய காரணத்தை கண்டறிய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை மெகபூபாஷா புகார் அளித்துள்ளார். Joe Biden Face Inquiry: அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியது அமெரிக்க பாராளுமன்றம்: தொடரப்போகும் விசாரணை.! 

பெற்றோர்களே கவனமாக இருங்கள்: குழந்தைகள் சாலைகளில் பயணம் செய்யும்போது, உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பும்போது, கடைகளுக்கு சென்று பொருளை வாங்கிவர சொல்லும்போது கவனமாக செல்கிறார்களா? என்பதை முதலில் பெற்றோர் உறுதி செய்த பின்னரே தனியே சென்றுவர அனுமதியளிக்க வேண்டும். அதேவேளையில், ஒருவேளை ஏதேனும் காயம் ஏற்பட்டால் பெற்றோரிடம் தயக்கம் இன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்ப்பதே பல சோகத்திற்கு நாம் வழிவகை செய்யாமல் இருக்கும்.