Thangalaan Audio Launch: நடிகர் விக்ரமிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட இயக்குனர் பா. ரஞ்சித்; நெகிழ்ந்துபோன சியான்.. நெகிழவைக்கும் தங்கலான் இசை வெளியீட்டு விழா.!
படத்தின் வெளியீடு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
ஆகஸ்ட் 06, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் அட்டகத்தி, கபாலி, காலா, மெட்ராஸ், நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி வழங்கியவர் பா. ரஞ்சித் (Pa. Ranjith). இவர் தற்போது நடிகர் சியான் விக்ரமுடன் (Chiyaan Vikram) இணைந்து தங்கலான் என்ற படத்தை இயக்கி வந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் நடந்த விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தங்கலான் (Thangalaan) திரைப்படம், 15 ஆகஸ்ட் 2024 அன்று திரைக்கு வருகிறது.
தங்கலான் படக்குழு:
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி, டேனியல் கால்டகிரோன் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்திற்காக நடிகர் விக்ரம், பார்வதி, பசுபதி ஆகியோர் தங்களின் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி இருந்தனர். தங்கலான் படத்தின் இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொண்டுள்ளா நிலையில், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை கிஷோர் குமார், செல்வா ஆர்.கே ஆகியோர் கையாண்டுள்ளனர். படத்தை ஸ்டுடியோ கிரீன், நீலம் புரொடக்ஷன்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து ரூ.150 கோடி செலவில் தயாரித்து இருக்கிறது.
படம் வெளியிடும் தேதி:
தமிழ் திரையுலக ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் தங்கலான் திரைப்படத்திற்காக கடுமையான உழைப்பை படக்குழு வெளிப்படுத்தியுள்ள நிலையில், படம் 15 ஆகஸ்ட் 2024 அன்று வெளியாகிறது. படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது. இதனால் உலகளாவிய அடையாளத்தையும் தங்கலான் திரைப்படம் பெற்றுள்ளது. படத்தின் ஓடிடி வெளியீடு உரிமைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.35 கோடி கொடுத்து பெற்றுள்ளது. Jayam Ravi’s Brother Release Date: வெல்லப்போவது தலயா? தனி ஒருவனா? வெளியான ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் ரிலீஸ் அப்டேட்..!
இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் பெருமித பேச்சு:
இந்நிலையில், படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித், தங்கலான் படத்தின் இசை வெளியீடு விழாவில் விக்ரம் குறித்து மேடையில் பேசுகையில், "எனக்கு ஒரு பிடிவாதம் தான். நான் நினைப்பதை விக்ரம் சரியாக புரிந்துகொண்டார் என்பது தான். அவர் படத்தின்போதும், படப்பிடிப்பு நிறைவடைந்தபினரும் ஒரு காட்சியை மீண்டும் எடுக்க வேண்டும் என அழைத்தபோது உடனே வந்துவிட்டார். படத்தின் சண்டைக்காட்சிகளில் அவர் காயமடைந்தபோதிலும், மறுமுறை காட்சிகள் எடுக்கப்பட்டன. நான் அவரை நிறைய கொடுமைப்படுத்தினேன். அதற்கு என்னை அவர் மன்னிக்க வேண்டும். எனக்கு இன்று அவரை அவர் உறுதியாக இருக்கிறார்.
மனதை காயப்படுத்தி வென்ற இயக்குனர்:
நான் தங்கலானாக அவரை பார்த்ததால், அந்த கதாபாத்திரம் சரியாக வர வேண்டும் என போராடினேன். அதற்கு விக்ரம் இன்று வரை மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறார். என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய வெற்றியை நான் கொடுக்க வேண்டும் என நினைக்கிறன். விக்ரமுக்கு எதிர் கதாபாத்திரமாக நினைத்தபோது பசுபதியை தேர்வு செய்தேன். அவர் மிகவும் திறமைவாய்ந்த நடிகர். அவருக்கான கதாபாத்திரத்தை கூறிவிட்டால் போதும், அந்த கதாபாத்திரத்தை அப்படியே கொடுத்துவிட்டார். தனது உடல்நலனையும் அவர் பொருட்படுத்தாது எனக்காக நடித்துக்கொடுத்தார். பசுபதியின் நடிப்பு கட்டாயம் பாராட்டப்படும். பலரையும் கஷ்டப்படுத்தி சிறந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். படம் மிகப்பிரம்மாண்டமான அளவில் வந்துள்ளது. மிகப்பெரிய கூட்டத்தை படத்தில் நடிக்க வைத்துள்ளேன். படத்திற்காக பலரையும் கஷ்டப்படுத்தி நானும் கஷ்டமடைந்தேன். ஏனெனில் நான் யாரையும் கஷ்டப்படுத்தியது இல்லை. இந்த படத்திற்காக எனது மனசாட்சியை தாண்டி செயல்படுத்தி இருக்கிறேன்" என பேசினார்.
இயக்குனர் ரஞ்சித்தின் பாராட்டுகளை ஏற்றுக்கொண்ட நடிகர் விக்ரமும், தனது முகத்தில் புன்னகையுடன் நன்றியை தெரிவித்தார்.