சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. Squid Games Season 2: மரண பயம் காட்டும் விளையாட்டு.. வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்..!
ஜீனி: இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ஜீனி (Genie). அர்ஜூனன் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் வமிகா கப்பி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) சிறிது நாட்களுக்கு முன்பு வெளியானது.
காதலிக்க நேரமில்லை: தொடர்ந்து கடந்த மாதம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ (Kadhalikka Neramillai) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. Rashmika Mandanna Helps Kerala: கேரளா மாநில அரசுக்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி அளித்த நடிகை ராஷ்மிகா..!
பிரதர்: அதுமட்டுமின்றி பிரதர் (Brother) என்ற படத்திலும் ஜெயம் ரவி நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் பிரதர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஃப்ர்ஸ்ட் சிங்கிளான மக்காமிஷி பாடல் கடந்த 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், யூடியூப்பில் 5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 ஒடிடி தளம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளி தினத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், ஜெயம் ரவியின் பிரதர் படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#BrotherFromDiwali pic.twitter.com/asVOt3IlCq
— Jayam Ravi (@actor_jayamravi) August 3, 2024