Dulquer Salmaan in Porsche Magazine: போர்சே கார் நிறுவனத்தின் அட்டை படத்தில் நடிகர் துல்கர் சல்மான்: அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியர்.!
இவர் சமீபத்தில் போர்சே காரை வாங்கியதை தொடர்ந்து, அந்த நிறுவனம் தங்களது மாதாந்திர இதழில் துல்கர் சல்மானின் புகைப்படத்தை அட்டை படமாக வைத்திருக்கிறது.
செப்டம்பர் 18, திருவனந்தபுரம் (Cinema News): மலையாள மொழியில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், பாலிவுட் அளவில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் பெரும் நிறுவனங்கள் துல்கரை தங்களது விளம்பர மாடலாக நியமிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இவரது தந்தையான நடிகர் மம்முட்டியைப் போலவே இவரும் கார் விரும்பியாக இருக்கிறார். துல்கர் பலவித மாடல் கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு போர்சே பனமேரா டர்போ (Porsche Panamera Turbo) காரை வாங்கினார். அப்போதிலிருந்து துல்கருக்கு போர்சே கார்களோடு கிரேஸ் ஏற்பட்டுவிட்டது. Vishwakarma Yojana Scheme: கைவினை கலைஞர்களுக்கு கடன் உட்பட பல்வேறு சலுகைகள்: மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம்.!
அவர் சமீபத்தில் போர்சே கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தெரிகிறது. போர்சே கார் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிரேஸ்டோபோரஸ் (Christophorus) என்ற மாதாந்திர இதழை வெளியிடுகிறது.
துல்கரை பெருமைப்படுத்தும் விதமாக, போர்சே நிறுவனம் கிறிஸ்டோபோரஸ் இதழில் அவரது புகைப்படத்தை அட்டை படமாக வைத்து வெளியிட்டிருக்கிறது. இது அந்த இதழின் 408 வது வெளியீடு ஆகும். இத்தனை வருடங்களில் போர்சே வெளியிட்ட இந்த இதழின் அட்டை படத்தில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை நடிகர் துல்கர் சல்மான் பெற்றிருக்கிறார்.