செப்டம்பர் 18, புது டெல்லி (Political News): கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசு, விஸ்வகர்மா யோஜனா (Vishwakarma Yojana) திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்திற்கு இந்தியாவில் முதன்மையாக இருக்கும் 18 கலைத்துறைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் துவக்க விழாவில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிரதமர் மோடி தொடங்கி வைத்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு 8 சதவீதம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். ஏற்கனவே மத்திய அரசு, 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கு ரூ. 3,000 ஒதுக்கீடு செய்திருக்கிறது.” என்று தெரிவித்தார். Shantiniketan in World Heritage List: ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் (சாந்திநிகேதன்) உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் இடம்பெறுகிறது: யுனெஸ்கோ அறிவிப்பு.!
மேலும் அவர், கைவினை கலைஞர்களுக்கு அடமான ஆவணங்கள் (Collateral) எதுவும் இல்லாமல் 5% வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கப்படும் என்று கூறினார்.
ఢిల్లీలో కొత్తగా ప్రారంభించబడిన ప్రపంచ స్థాయి #Yashobhoomi కన్వెన్షన్ సెంటర్లో ప్రధానమంత్రి #VishwakarmaYojana ప్రారంభోత్సవం సందర్భంగా లబ్దిదారుని తో మోడీ జీ .. pic.twitter.com/rls5NlN901
— Satish Chandra (@BSChandra4BJP) September 17, 2023
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கடன் தொகையில் முதற்கட்டமாக ஒரு லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்றும், இதை 18 மாதங்களில் திரும்ப செலுத்திய பிறகு, ரூபாய் இரண்டு லட்சம் கடன் பெற தகுதி அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
நிதியுதவி மட்டுமல்லாமல் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், திறன் வளர்ப்பு பயிற்சி (Skill Development Training), தொழில்நுட்பங்கள் குறித்த புரிதல், பிராண்ட் ப்ரோமோஷன், (Brand Promotion) உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுடன் இணைதல் போன்ற விஷயங்களிலும் உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் அனைவருக்கும் 500 ரூபாய் ஊக்கத்தொகையுடன் ஐந்து நாளைக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்றும், மேலும் டூல் கிட் (Tool Kit) வாங்குபவர்களுக்கு 15,000 பணமும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் மாதாந்திர சலுகைகள் வழங்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.