Golden Globe Awards 2024: கோல்டன் குளோப் விருதுகள் 2024... யாருக்கு என்ன விருது?.. முழுப்பட்டியல் இதோ..!
இந்திய நேரப்படி 81வது குளோப் விருதுகள் விழா இன்று காலை நடந்து முடிந்திருக்கிறது.
ஜனவரி 8, அமெரிக்கா (America): 2024ம் ஆண்டுக்கான 81 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, அமெரிக்காவில் பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் ஜோ கோய் தொகுத்து வழங்கினார். இதில் ஓபன்ஹெய்மர் படத்துக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளன.
விருதுகளை தட்டித் தூக்கிய ஓபன்ஹெய்மர்: இதில்,கோல்டன் குளோப்ஸ் 2024 (Golden Globe Awards) ஆண்டுக்கான, சிறந்த மோஷன் படப்பிரிவில் ஓபன்ஹைமர் (Oppenheimer), கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர், மூன் மேஸ்ட்ரோ, ஃபாஸ்ட் லைவ்ஸ், அனாடமி ஆஃப் எ ஃபால் தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநராக கிறிஸ்டோபர் நோலன், சிறந்த நடிகராக சிலியன் மர்பி, சிறந்த துணை நடிகராக ராபர்ட் டவுனி ஜூனியர், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் லுட்விக் கோரன்சன் ஆகியோர் ஓபன்ஹெய்மர் படத்துக்காக விருதுகள் வென்றுள்ளனர். இதில் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் பெறும் முதல் கோல்டன் குளோப் விருது இதுதான். உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட நோலனுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. Salman Khans Security Breached: நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயற்சி?.. ஊடுருவிய இருவர் கும்பல்.. விசாரணையில் பகீர் தகவல்..!
முழுப்பட்டியல்: மேலும் சிறந்த நடிகைக்கான விருதை எமா ஸ்டோன் மற்றும் லிலி கிலாட்ஸ்டோன் பெற்றுள்ளனர். சிறந்த திரைப்படம் மியூசிக்கல் காமெடியில் புவர் திங்ஸ் படமும், சிறந்த திரைக்கதை அனாடமி ஆஃப் எ ஃபால் படமும் விருதை வென்றுள்ளது. சிறந்த காமெடி நடிகர் விருதை பால் ஜியாமெட்டி வென்றுள்ளார். சிறந்த துணை நடிகை விருதை டாவின் ஜாய் ராண்டால்ஃப் வென்றுள்ளார். சிறந்த டிவி தொடர் விருதை சக்ஸசன் மற்றும் தி பியர் தொடர் வென்றுள்ளது. சிறந்த படம் ஆங்கிலம் அல்லாத மொழி விருதை அனாடமி ஆஃப் எ ஃபால் படம் வென்றுள்ளது. மேலும் சிறந்த பாடல் விருதை ’வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ பாடலும், சிறந்த அனிமேஷன் படம் விருதை ’தி பாய் அண்ட் தி ஹெரோன் படமும், சிறந்த வசூல் சாதனை படம் விருதை பார்பி படமும் வென்றுள்ளது.