ஜனவரி 8, மும்பை (Mumbai): பாலிவுட் நடிகர் சல்மான்கான் (Salman Khan) ஹிந்தியில் மிகவும் பிரபலம் வாய்ந்த நடிகர் ஆவார். ஆனால் இவரின் கடந்த இரண்டு படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து கொண்டு தான் உள்ளார். தற்போது இவர் பிக் பாஸ் 17 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். இந்நிலையில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
கொலை செய்ய திட்டமா?: லாரன்ஸ் என்பவர் பஞ்சாப் பாடகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளது மட்டுமல்லாமல் பல குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இவரின் கொலை மிரட்டலை தொடர்ந்து, சல்மான் கானுக்கு மும்பை காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. iPhone Survives 16,000 Feet Drop: 16,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ஐபோன்... ஒரு ஸ்க்ராட்ச் கூட இல்லாமல் பத்திரமாக மீட்பு..!
அத்துமீறி நுழைய முயன்ற நபர்கள்: இந்நிலையில் சல்மான் கான் வீட்டுக்குள் அத்துமீறி இருவர் நுழைய முயற்சித்துள்ளனர். சல்மான் கானுக்கு மும்பை அருகில் நவிமும்பையில் இருக்கும் பன்வெ என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டிற்கு சல்மான் கான் அடிக்கடி வருவது வழக்கம். இவரது பிறந்த நாளை இவர் எப்போதும் இங்குதான் கொண்டாடுவார். ஆனால் கொலை மிரட்டல் காரணமாக இங்கு வருவதை அவர் குறைத்துள்ளார். இந்நிலையில் சல்மான் கானின் பண்ணை வீட்டிற்குள் இரண்டு பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். அவர்கள் ஒரு மரத்தில் ஏறி அங்கிருந்து வீட்டிற்குள் குதிக்க முயற்சித்துள்ளனர். இவர்கள் இருவரையும் வீட்டின் பாதுகாவலர்கள் பிடித்து விட்டனர்.
தற்போது இவர்கள் இருவரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் இருவரிடம் இருந்தும் போலி ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல்கள் தெரிவித்தனர்.
Maharashtra | A case has been registered at Panvel Rural Police Station against two people for trying to enter Salman Khan's Arpita Farm House in Waze, New Panvel. Further investigation is being done: Anil Patil, Inspector, PS Panvel Taluka
"Two youths from Punjab came to… pic.twitter.com/2vN6XpbLLd
— ANI (@ANI) January 8, 2024