OTT Influence on Cinema: போட்டி போட்டுக் கொண்டு படங்களை வாங்கும் ஓடிடி நிறுவனங்கள்: படங்களின் வெளியீட்டில் தலையீடு.!
இந்தியாவில் தற்போது நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி நிறுவனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தான் திரைப்படங்களின் வெளியீட்டை நிர்ணயிப்பதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 14, சென்னை (Cinema News): வழக்கமாக திரைப்படங்களின் வெளியீட்டை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தான் தீர்மானிப்பார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களின் வெளியீட்டை அந்தப் படங்களை வாங்கப் போகும் ஓடிடி நிறுவனங்கள் (Amazon, Netflix, Disney+ Hotstar, SonyLIV) தான் தீர்மானிப்பதாக கூறப்படுகிறது.
ஓடிடி நிறுவனங்கள் (OTT Platforms) ஒரே நாளில் குறிப்பிட்ட மொழியில் ஒரு படத்திற்கு மேல் பெரும்பாலாக வெளியிடுவதில்லை. அதை கணக்கில் கொண்டு தான் எந்த நாளில் படங்கள் வெளியாக வேண்டும் என்பதை ஒப்பந்தம் போடுவதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களின் பொருளாதார சுமையை குறைப்பதனாலேயே ஓடிடி நிறுவனங்களின் இந்த ஒப்பந்தங்களுக்கு அவர்கள் ஒத்துழைக்கின்றனர். Nipah Virus in Kozhikode: கோழிக்கோடில் 5 பேருக்கு நிபா வைரஸ் தொற்று: கடுமையாகும் கட்டுப்பாட்டு விதிகள்.!
விஜய்யின் லியோ படத்தில் கூட ‘எல்சியு’ (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) இருந்தால் கூடுதல் தொகை இல்லாவிட்டால், அந்தத் தொகை வழங்கப்படாது என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். லோகேஷின் முந்தைய படங்களை போல் தனது படத்தில் ‘எல்சியு’ இடம்பெறக்கூடாது என்று விஜய் தீர்மானமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் விஜயை சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓடிடி நிறுவனங்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்று தயாரிப்பாளர்கள் பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.