ஆகஸ்ட் 01, டெல்லி (Cinema News): மத்திய அரசு, இந்திய சினிமா துறையில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் இன்று (ஆகஸ்ட் 01, 2025)அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள், இந்த விருதுகளுக்கு தகுதியானவை ஆகும். 71வது தேசிய திரைப்பட விருதுகளை (National Film Awards) வென்றவர்களின் முழு விவரங்களை இப்பதிவில் காணலாம். Nandini Kashyap: 120 கி.மீ வேகத்தில் பறந்து மாணவரின் உயிரைப்பறித்த நடிகை.!
71வது தேசிய திரைப்பட விருதுகள் (2025):
சிறந்த திரைப்படம்
* சிறந்த திரைப்படம்: 12th பெயில் (12th Fail)
* சிறந்த பிரபலமான திரைப்படம்: ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி (Rocky Aur Rani Kii Prem Kahaani)
சிறந்த நடிப்பு
* சிறந்த நடிகர்: ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மாஸ்ஸி (12th Fail)
* சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (Mrs Chatterjee vs Norway)
* சிறந்த துணை நடிகர்: விஜயராகவன் (Pookkaalam), எம்எஸ் பாஸ்கர் (Parking)
* சிறந்த துணை நடிகை: ஊர்வசி (Ullozhukku), ஜானகி போடிவாலா (Vash)
சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள்
* சிறந்த இயக்குனர்: சுதிப்தோ சென் (The Kerala Story)
* சிறந்த குழந்தை நட்சத்திரம்: சுகிருதி வேனி பந்த்ரெடி, கபீர் கண்டானே மற்றும் த்ரீஷ் தோசர்
* சிறந்த ஒளிப்பதிவு: பிரசாந்தனு மொஹாபத்ரா (The Kerala Story)
* சிறந்த திரைக்கதை: சாய் ராஜேஷ் நீலம் (Baby), ராம்குமார் பாலகிருஷ்ணன் (Parking)
* சிறந்த வசனம்: தீபக் கிங்ரானி (Sirf Ek Bandaa Kaafi Hai)
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: மோகன்தாஸ் (2018: Everyone is a Hero)
* சிறந்த படத்தொகுப்பு: மிதுன் முரளி (Pookkaalam)
* சிறந்த பின்னணி இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் (Animal)
* சிறந்த ஒப்பனை: ஸ்ரீகாந்த் தேசாய் (Sam Bahadur)
* சிறந்த ஆடை வடிவமைப்பு: சச்சின் லோவல்கர், திவ்யா மற்றும் நிதி காம்பீர் (Sam Bahadur)
* சிறந்த இசை இயக்கம்: ஜி.வி. பிரகாஷ் குமார் (வாத்தி)
* சிறந்த ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் முரளிதரன் (Animal)
* சிறந்த நடன அமைப்பு: வைபவி மெர்ச்சண்ட் (Dhindhora Baje - Rocky Aur Rani Kii Prem Kahaani)
* சிறந்த சண்டை இயக்கம்: நந்து-பிருத்வி (Hanu-Man). Madhampatty Rangaraj: நேற்று கல்யாணம்.. இன்று கர்ப்பம்.. மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி.!
சிறந்த மொழிப் படங்கள்
* சிறந்த தமிழ் திரைப்படம்: பார்க்கிங் (Parking)
* சிறந்த இந்தி திரைப்படம்: காதல்: ய ஜாக்புரூட் மிஸ்ட்ரி (Kathal: A Jackfruit Mystery)
* சிறந்த மலையாள திரைப்படம்: உள்ளொலுக்கு (Ullozhukku)
* சிறந்த தெலுங்கு திரைப்படம்: பகவந்த் கேசரி (Bhagavanth Kesari)
* சிறந்த கன்னட திரைப்படம்: கண்டீலு - தி ரே ஆப் ஹோப் (Kandeelu- The Ray of Hope)
* சிறந்த மராத்தி திரைப்படம்: சியாம்சி ஆய் (Shyamchi Aai)
* சிறந்த பஞ்சாபி திரைப்படம்: கோடே கோடே ஜா (Godday Godday Chaa)
* சிறந்த ஒடியா திரைப்படம்: புஷ்காரா (Pushkara)
* சிறந்த பெங்காலி திரைப்படம்: டீப் பிரிட்ஜ் (Deep Fridge)
* சிறந்த அசாமிஸ் திரைப்படம்: ராங்க்டபு 1982 (Rongatapu 1982)
* சிறந்த குஜராத்தி திரைப்படம்: வாஸ் (Vash)
* சிறந்த தை ஃபகே திரைப்படம்: பை டங்.. ஸ்டெப் ஆப் ஹோப் (Pai Tang.. Step of Hope)