Nipah Virus Test (Photo Credit : Twitter)

செப்டம்பர் 14, கோழிக்கோடு (Kerala News): கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் தொற்றுக்கு ஏற்கனவே இருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், மேலும் ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பலியான இரண்டு பேர் பயணம் செய்த இடங்களையும், தொடர்பு கொண்ட மனிதர்களின் பட்டியலையும் கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இதில் தொடர்பு கொள்ளப்பட்டவர்களின் வரிசையில் (Contact List) 700 க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். Honor 90 5G: அட்டகாசமாக களமிறங்கியது Honor 90 5G ஸ்மார்ட்போன்.. நீங்கள் எதிர்பார்க்கும் அசத்தல் தகவல் இதோ.!

நோய் தொற்றால் பலியானவர்களின் வீடுகள் இருக்கும் பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக (Containment Zone) சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ், பங்களாதேஷ் வேரியண்ட் (Bangladesh Variant) என்றும், நிபா வைரஸ் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், இந்த வைரஸுக்கு உயிரிழப்பு சதவீதம் அதிகம் (High Mortality Rate) என்றும் கூறியிருக்கிறார்.

கோழிக்கோடு நகரத்தில் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரைக்கும் மட்டுமே இயங்கும். மேலும் அப்பகுதியில் மக்கள் கூடும் பெரிய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.