12 Jan Release Movies: பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகும் படங்கள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ..!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பு வெளியான சிலர் திரைப்படம் உலகளவில் சாதனை படைத்தாலும், தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றி என்பது இல்லை. இந்த பொங்கல் தமிழ்நாட்டில் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் களமிறக்கப்படாமல் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

12 Jan Release Movies: பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகும் படங்கள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ..!
Movie Posters of Captain Miller - Merry Christmas - Mission Chapter 1 (Photo Credit: @TeamODFC | @Karthikravivarm | @ArunVijay X)

ஜனவரி 09, சென்னை (Cinema News): புத்தாண்டின் தொடக்கம் திரை ரசிகர்களுக்கு முதல் வாரத்தில் எதிர்பார்த்த படங்கள் ஏதும் வெளியிடாததால், அவர்களுக்கு சோகம் மட்டுமே மிஞ்சியது. ஆனால், பொங்கலை ஒட்டி கொண்டாட்ட விருந்தாக, புத்தாண்டின் இரண்டாவது வாரத்தில் 6க்கும் மேற்பட்ட அட்டகாசமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அது குறித்த விபரங்களை தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்.

6. குண்டூர் காரம் (Gunturu Kaaram): துருவ்விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், நடிகர்கள் மகேஷ் பாபு, ஸ்ரீலிலா, மீனாட்சி சௌதாரி, ஜெகபதிபாபு, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஈஸ்வரி ராவ், பிரகாஷ்ராஜ், முரளி சர்மா, சுனில் உட்பட பலர் நடித்து, தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் குண்டூர் காரம். ரூபாய் 200 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், 12ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு மொழியில் வெளியாகிறது. Unity Layoff: 1300 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குகிறது யூனிட்டி நிறுவனம்.. அடுத்தடுத்து தொடரும் வேலையிழப்புகள்.! 

5. ஹனுமன் (HanuMan): பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர்கள் தேஜா சஞ்சா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், தீபக் செட்டி, கிஷோர், சத்யா உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமன். ரூபாய் 60 கோடி செலவில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு ஜனவரி 12 அன்று வருகிறது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, அனுமன் தொடர்பான கதைக்களம் கொண்ட திரைப்படம் வெளியாக்குவதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், ஜப்பானியம், சீனம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

4. அயலான் (Ayalaan): ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், முனீஸ்காந்த், ஜியார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள திரைப்படம், தமிழ்நாட்டில் பெருவாரியான வரவேற்பை ஏற்படுத்தியுள்ள வேற்றுக்கிரகவாசிகள் கொண்ட கதை அம்ச திரைப்படம் ஆகும். இதனால் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 12 ஜனவரி அன்று வெளியாகிறது. படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு சித்தார்த் தனது பின்னணி குரலை வழங்கி இருக்கிறார். Thanjavur Shocker: காதல் திருமணம் செய்த 3 நாளில் நடந்த கொடூர கொலை: சாதிய பிரச்சனையால் நடந்த பயங்கரம்.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்..! 

3. மேரி கிறிஸ்துமஸ் (Merry Christmas): ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், நடிகர்கள் கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி, அஸ்வினி கல்சேகர், ராதிகா ஆப்தே உட்பட பலர் நடிக்க வெளியாக உள்ள திரைப்படம் மேரி கிறிஸ்மஸ். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதி, ஹிந்தியில் புகழ்பெற்ற நடிகை கத்ரீனா கைப் ஆகியோர் இணைந்து முதல் முறையாக நடித்து இருக்கின்றனர். இதனால் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி கட்டமாக அவை தள்ளி சென்று தற்போது பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகிறது. இப்படம் 12 ஜனவரி அன்று திரையரங்குகளில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Katrina Kaif - Vijay Sethupathi | Merry Christmas Movie (Photo Credit: @KikiVijay X)

2. கேப்டன் மில்லர் (Captain Miller): அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ், சிவராஜ் குமார், சுதீப் கிசான், பிரியங்கா, அருள் மோகன், அதிதீபாலன், ஜான் கொக்கன், வினோத், நாசர், காளி வெங்கட், பாலசரவணன், ஜெயபிரகாஷ் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், தமிழ் தெலுங்கு உட்பட பல மொழிகளில் இப்படம் 12 ஜனவரி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. MILK CAKE RECIPE: சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி.. பால் கேக் செய்வது எப்படி?.! 

1. மிஷன் சாப்டர் 1 (Mission Chapter 1): ஏ.எல் விஜய் இயக்கத்தில், நடிகர்கள் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், ஹரி ஹாசன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மிஷின் சாப்டர் 1: அச்சம் என்பது மடமையடா. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள படம் அதிரடி காட்சிகள் கொண்ட படமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் இது எனினும், இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement