Game Changer Update: ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் எப்போது ரிலீஸ்?.. சர்ப்ரைஸ் அறிவிப்பு கொடுத்த பிரபலம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
நீண்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியீடு குறித்த தகவலை தில் ராஜு உறுதி செய்துள்ள காரணத்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது.
ஜூலை 22, விசாகப்பட்டினம் (Cinema News): ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் ராம் சரண் (Ram Charan) மூன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க, சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேம் சேஞ்சர் (Game Changer). இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சமுத்திரக்கனி, நாசர் ஆகியோரின் நடிக்கின்றனர்.
ரூபாய் 250 கோடி செலவில் எடுக்கப்படும் திரைப்படம்:
ராம் சரணின் 15 வது திரைப்படமான கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப்பிரதேசம், மும்பை, சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. தமன் இசையமைப்பில், திரு ஒளிப்பதிவில், சமீர் முகமது எடிட்டிங்கில் படம் தயாராகி வருகிறது. ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் படமாக, தெலுங்கு அரசியலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்படுகிறது. படம் ரூபாய் 250 கோடி செலவில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டுக்குள் இப்படம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Jayam Ravi's 'Brother' First Single Out: ஜெயம் ரவியின் 'மக்காமிஷி' பாடல் வெளியீடு.. "எனக்கு ரத்தம் வந்தா உனக்கு இன்னா" வைப் செய்யும் ரசிகர்கள்..!
வெளியீடுக்கு முன்பே விற்கப்பட்ட ஓடிடி, சாட்லைட் உரிமை:
படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் பிற பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற 'ஜருகண்டி' (Jaragandi Song from Game Changer) என்ற நான்கு நிமிட பாடலும் முன்னதாகவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் உரிமையை அமேசானும் (Amazon OTT), தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ (Zee Studios) நிறுவனமும் கைப்பற்றி வெளியிடுக்கு முன்னதாகவே நல்ல வசூலை குவித்து இருக்கிறது.
கிறிஸ்துமஸில் கேம் சேஞ்சர்:
இந்நிலையில், இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான தில் ராஜு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது கேம் சேஞ்சர் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகலாம் என கூறினார்.