Shah Rukh Khan Visits Tirupati: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை நயன்தாரா: பட்டு வேட்டி சட்டையில் மாஸ் காட்டிய ஷாருக்..!
இந்த படம் வெற்றியடைய திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை நயன்தாரா சுப்ரபாத வழிபாடு மேற்கொண்டனர்.
செப்டம்பர் 5, திருப்பதி (Cinema News): அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்கு முன்பு வெளிவந்த ஷாருக்கானின் ‘பதான்’ (Pathaan) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. அதேபோல இந்தப் படத்தையும் ஷாருக்கான் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். Virat Kohli Autograph: நேபாள வேகப்பந்து வீச்சாளரின் ஷூவில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த விராட் கோலி..!
நாளை மறுநாள் ஜவான் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், படம் வெற்றி பெற, ஏழுமலையானின் அருள் வேண்டி நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா திருப்பதிக்கு வந்தனர். அவர்கள் இரவு திருப்பதி மலையில் தங்கிவிட்டு இன்று அதிகாலை கோயிலுக்குச் சென்று சுப்ரபாத சேவையில் பங்கெடுத்து ஏழுமலையானை வழிபாடு செய்தனர்.
நடிகர் ஷாருக்கான் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்திருக்கிறார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக வேஷ்டிசட்டை மற்றும் அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். கொடிமரம் தொடங்கி மூலவர் சன்னதி வரை எல்லாவற்றையும் வழிபாடு செய்தார். தரிசனம் முடிந்து கோயிலுக்கு வெளியே வந்தவுடன் ரசிகர்கள் கூட்டம் கூடியது. அதனால் வேகவேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.