சாம்பால் காமியுடன் - விராட் கோலி (Photo Credit: Twitter)

செப்டம்பர் 05, இலங்கை (Cricket News): இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 தொடரில், ஆசியாவை சேர்ந்த 6 நாடுகள் தங்களுக்குள் கிரிக்கெட் பலபரீட்சை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின்னர் களத்தில் சந்தித்த இந்தியா-பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையினால் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு முடித்துவைக்கப்பட்டது.

நேற்று நேபாளம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்ற நிலையில், இறுதியில் இந்தியா டி.எல்.எஸ் முறையில் வெற்றி அடைந்தது. இன்று ஆப்கானிஸ்தான் - ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. Zoological Park Entry Fees: சேலம், வேலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணங்கள் அதிரடி உயர்வு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி, 48.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 230 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் மழை குறுக்கிட்டதால், இந்திய அணிக்கு 145 ரன்கள் ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட, அணியின் சார்பில் களமிறங்கிய ரோஹித் 59 பந்துகளில் 74 ரன்னும், ஹில் 62 பந்துகளில் 67 ரன்னும் அடித்து அணியை வெற்றியடைய செய்தனர். 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் குவித்த இந்திய அணி வெற்றி அடைந்தது.

இந்நிலையில், நேபாள நாட்டினருக்கு பிடித்த கிரிக்கெட் வீரரான விராட் கோலியிடம், நேபாள அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோம்பால் கமி தனது காலனியில் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டார். விராட் கோலியின் மீது நேபாள நாட்டினர் கிரிக்கெட் ரீதியாக பேரன்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.