IPL Auction 2025 Live

Rajinikanth Temple at Madurai: ரஜினியை சாமியாக நினைத்து வணங்கும் ரசிகர்; தலைமுறைகளை கடந்து ரசிகப்பெருமக்களை பெற்ற சூப்பர்ஸ்டார்.!

தமிழ் மக்கள் தனக்கு தந்த ஆதரவை என்றும் மறவாது இருப்பேன், உடல் தமிழ் மண்ணுக்குத்தான் என்ற விஷயத்தில் ரஜினிகாந்த் பிடித்த நிலைப்பாட்டுடன் இருக்கிறார்.

Rajinikanth Temple Madurai (Photo Credit: X)

நவம்பர் 01, மதுரை (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில், மூத்த மற்றும் முக்கிய நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரை ரசிகர்கள் தலைவர், தளபதி, கடவுள் ரஜினி என அழைப்பது வழக்கம். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வரவேற்பு மற்றும் வசூல் வெற்றியை அடைந்தது.

வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் ரஜினிகாந்தின் கலையுலக பயணம், 40 ஆண்டுகளை கடந்தும் வெற்றிகரமாக தொடர்கிறது என்றால், அது அவரின் வெறித்தனமான ரசிகர்களால் மட்டுமே என்று ரஜினியே பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் மக்கள் தனக்கு தந்த ஆதரவை என்றும் மறவாது இருப்பேன், உடல் தமிழ் மண்ணுக்குத்தான் என்ற விஷயத்தில் அவர் பிடித்த நிலைப்பாட்டுடன் இருப்பதால், அவருக்கு தலைமுறைகள் கடந்தும் ரசிகர்கள் இருக்கின்றனர். Malaiyalam TV Actress Died by Heart Attack: பிரபல மலையாள நடிகை, மருத்துவருமான பிரியா மாரடைப்பால் காலமானார்.. 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த சோகம்.!

தற்போது லைகா ப்ரொடெக்சன் தயாரிப்பில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் பெயரிடப்படாத தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

முந்தைய ஆண்டுகளில் ரஜினியின் திரைப்படம் வெளியாகிறது என்றால், ஊரே விழாகோலம்போல இருக்கும். ரஜினி ரசிகர்களின் நற்பணி மன்ற செயல்கள் விறுவிறுப்புடன் நடைபெறும். கோவிலில் அன்னதானம், மண்சோறு சாப்பிடுதல், விரத வழிபாடு என ரசிகர்களின் செயல்களுக்கு எல்லையே இருக்காது.

அவரை உயிருக்கு உயிராக நேசிக்கும் ரசிகர்கள் சிலர், ரஜினியை கடவுளாக வணங்குவதும், அவரைப்பற்றி யாரேனும் அவதூறு பேசினால் கொந்தளிப்பதும் வழக்கம். இந்த நிலையில், மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற ரசிகர், தனது இல்லத்தின் மாடியில் ரஜினிக்கு கோவில் கட்டி, சாமி கும்பிடுவதுபோல தினமும் வணங்கி வருகிறார்.

கார்த்திக் மற்றும் அவரின் மகள் அனுஷியா ஆகியோர் தீவிர ரஜினி ரசிகர்கள் என்பதால், வீட்டிலேயே கோவில் அமைக்கும் முடிவுக்கு குடும்பம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. 250 கிலோ அளவிலான ரஜினிகாந்தின் சிலை அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.