Sowndarya Amudhamozhi: செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி புற்றுநோயால் மரணம்; ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!
இரத்த புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த பிரபல செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜூலை 28, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் ஒளிபரப்பு செய்யப்படும் நியூஸ் தமிழ் 24X7, பாலிமர் செய்திகள் உட்பட பல தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராகவும், அரசியல் சார்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வேலை பார்த்து வந்தவர் சௌந்தர்யா அமுதமொழி (News Reader Sowndarya Amudhamozhi). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
கம்பீர குரலுக்கு சொந்த செய்திவாசிப்பாளர்:
சௌந்தர்யா அமுதமொழியின் கம்பீர குரலுக்கு என ரசிகர்கள் கூட்டமே இருந்த நிலையில், புற்றுநோய் தொடர்பான தகவல் கடும் அதிர்ச்சியை தந்தது. அவருக்காக நியூஸ் தமிழ் 24X7 நிறுவனம் மற்றும் செய்தி வாசிப்பாளர் சங்கம் சார்பில் ரூ.5.51 இலட்சம், தமிழ்நாடு முதல்வரின் சார்பில் ரூ.50 இலட்சம் நிதிஉதவி ஆகியவையும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சௌந்தர்யா அமுதமொழி சிகிச்சையிலேயே இருந்து வந்தார். Aged Woman Killed: பணம், நகைக்காக 68 வயது மூதாட்டி துண்டுதுண்டாக வெட்டிக்கொலை; தம்பதி பகீர் செயல்.. சென்னையில் பயங்கரம்.!
சிகிச்சை பலனின்றி மரணம்:
புற்றுநோயின் தீவிரத்தன்மை காரணமாக தொடர்ந்து உடல்நலம் குன்றியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவு செய்தியாளர்களிடையே மட்டுமல்லாது பலதரப்பிலும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரின் மறைவுக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் உட்பட பல அரசியல்கட்சித்தலைவர்களும் தங்களின் இரங்கலை பதிவு செய்திருந்தனர்.
ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்:
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தனது இரங்கல் செய்திக்குறிப்பில், "சௌந்தர்யா. ஏ அவர்களின் அகால மரணத்தால் வேதனையடைந்தேன். அவர் ஒரு இளம், பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி!" என தெரிவித்துள்ளார்.
தனது சிகிச்சைக்கு பணம் கேட்டு சௌந்தர்யா அமுதமொழி வைத்திருந்த கோரிக்கை:
சௌந்தர்யா அமுதமொழிக்கு இரங்கல் தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி:
பத்திரிகைத் துறையில் பணியாற்றி வரும் நபர்கள், தங்களது செய்தி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் அதேவேளையில், கொஞ்சம் தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.