Maestro Ustad Rashid Khan Died: பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி.!

பிரபல ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்.

Ustad Rashid Khan (Photo Credit: @mubiindia X)

ஜனவரி 10, மும்பை (Mumbai): பிரபல ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் கடந்த சில வருடங்களாக புரோஸ்டேட் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இவர் கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 55. இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவரது மறைவிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். PM Modi Condoles to Ustad Rashid Khan: "உஸ்தாத் கானின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது" - மறைந்த பிரபல பாடகருக்கு பிரதமர் மோடி இரங்கல்.!

இவர் ஒரு ஹிந்துஸ்தானி இசை கலைஞராக இருந்தாலும், ஃப்யூஷன், பாலிவுட், டோலிவுட் போன்ற பல மொழி படங்களில் பிரபலமான பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு இவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.