Actress B Saroja Devi (Photo Credit :@gautamitads X)

ஜூலை 14, சென்னை (Cinema News): தமிழ், கன்னடம், தெலுங்கு உட்பட 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (வயது 87). இவர் தமிழில் கடந்த 1958 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்தில் அறிமுகமானார். 1965ல் கன்னட மொழியில் வெளியான படத்தில் அறிமுகமான நடிகை தொடர்ந்து தமிழில் அறிமுகமான பின்னர் 17 ஆண்டுகள் தனிப்பெரும் நடிகையாக புகழ் பெற்றிருந்தார். திரைப்படங்களில் கவர்ச்சி காண்பிக்காமல் தனது தனித்துவமான நடிப்பால் 'கன்னடத்து பைங்கிளி' என்று ரசிகர்களாலும், திரையுலகினராலும் போற்றப்பட்ட நடிகை சரோஜாதேவி 'அபிநய சரஸ்வதி' என்றும் அறியப்படுகிறார்.

மறைந்த கன்னடத்து பைங்கிளி :

தற்போது வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை இன்று (ஜூலை 14) பெங்களூரில் இயற்கை எய்தினார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழ் மொழியில் எம்.ஜி.ஆர் உடன் 26 படத்திலும், சிவாஜியுடன் 22 படத்திலும், பிற முன்னணி நடிகர்களுடன் அன்றைய காலத்திலும் நடித்திருந்தார். விஜயுடன் ஒன்ஸ்மோர், சூர்யாவுடன் ஆதவன் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.