ஜனவரி 10, புதுடெல்லி (New Delhi): இந்துஸ்தானி பாரம்பரிய இசைகளை இந்தியாவுக்கு வழங்கி வந்த, இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ரஷீத் கான் (Ustad Rashid Khan). கடந்த 1991ம் ஆண்டு திரையுலகில் தொடங்கிய இவரின் இசைப்பயணம், நேற்று வரை அவரின் இசையால் நனைந்து வந்தது. திரைத்துறையில் மேடை இசையமைப்பாளராக அறிமுகமாகி, அதனைத்தொடர்ந்து தனது திறமையால் பல கஷ்டங்களை கடந்து சாதனை படைத்தவர்களின் ரஷீத் கானும் குறிப்பிடத்தக்கவர். Morning Eating Fruits: காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
மத்திய அரசின் விருதுகள் வழங்கி கெளரவம்: ஹிந்தி மொழியில் வெளியான பல பாடல்களுக்கு, இவர் தனது ஹிந்துஸ்தானி முறையில் இசையமைத்து கொடுத்து இருக்கிறார். இவரின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு அரசும் 2006ம் ஆண்டு பத்ம ஸ்ரீ, 2022ம் ஆண்டு பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கியும் கௌரவித்துள்ளது. இவர் தனது 54 வயதில் பாடகர் ரஷீத் கான், கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவால் நேற்று இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Patna Shocker: 8, 10 வயது சிறுமிகள் சாலையோரம் மீட்பு; ஒருவர் பலி., மற்றொருவர் உயிர் ஊசல்.. பாலியல் பலாத்காரம் & கொலை?.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல்: இந்நிலையில், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "பாரம்பரியங்கள் கொண்ட இந்திய இசையுலகில், புகழ்பெற்ற நபராக இருந்த உஸ்தாத் கானின் மறைவு எனக்கு வேதனையை வழங்குகிறது. அவரின் ஈடில்லாத திறமை, இசை மீதான அர்ப்பணிப்பு, இந்திய கலாச்சாரத்தை வலுப்படுத்தியது, தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது போன்ற செயல்கள் வியப்பின் அடையாளம். அவரது மறைவு வெற்றிடத்தை உண்டாக்கி இருக்கிறது. இதனை நிரப்புவது கடினம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்" என கூறியுள்ளார்.
Pained by the demise of Ustad Rashid Khan Ji, a legendary figure in the world of Indian classical music. His unparalleled talent and dedication to music enriched our cultural world and inspired generations. His passing leaves a void that will be hard to fill. My heartfelt… pic.twitter.com/u8qvcbCSQ6
— Narendra Modi (@narendramodi) January 9, 2024