Jammu Kashmir Elections 2024: 24 தொகுதிகளில் முதற்கட்டமாக நடக்கும் வாக்குப்பதிவு; விறுவிறுப்புடன் வாக்களிக்கும் மக்கள்.!
இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
செப்டம்பர் 18, ஜம்மு (Jammu Kashmir News): சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பின்னர், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த விறுவிறுப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பர் 18ம் தேதியான இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள 7 மாவட்டங்களில் இருக்கும் 24 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. School Holiday: 1 - 8ம் வகுப்பு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை; புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு.!
பலத்த பாதுகாப்புடன் தேர்தல்:
பிர்பிஞ்சன் மலைத்தொடரில் இருக்கும் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 219 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 90 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார்கள். 14 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள், காவலர்கள், சிஆர்பிஎப், இந்திய இராணுவம் உட்பட பலத்த பாதுகாப்புடன் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் தங்களின் கடமையை திரண்டு வந்து செலுத்தி வருகின்றனர்.
23 இலட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்:
மொத்தமாக 24 தொகுதிகளில் 23,27,580 பேர் வாக்காளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 11,76,462 ஆண்களும், 11,51,058 பெண்களும் இருக்கிறார்கள். 1.23 இலட்சம் இளம் வாக்காளர்களும், 28,309 மாற்றுத்திறன் வாக்காளர்களும், 15,774 வயதான வாக்காளர்களும் இருக்கின்றனர். மொத்தமாக 3,276 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதனைத்தொடர்ந்து, அடுத்தகட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ம் தேதியும், அக்டோபர் 01ம் தேதியும் நடைபெறுகிறது. அக்டோபர் 08ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும்.
வரிசையில் காத்திருந்து விறுவிறுப்புடன் வாக்களிக்கும் மக்கள்: