School Holiday (Photo Credit: @TNRepublicnews X)

செப்டம்பர் 18, பாண்டிச்சேரி (Pondicherry News): புதுச்சேரி மாநிலத்தில் ரங்கசாமி (Rangasamy) தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் (NR Congress), பாஜக கூட்டணி ஆட்சி (Pondicherry Govt) நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் திமுக, காங்கிரஸ் இயக்கங்கள், தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறது. சமீபத்தில் அம்மாநிலத்தில் மின்கட்டண உயர்வானவது அமல்படுத்தப்பட்டது. DMK 75: திமுக பவள விழா: உயிர்பெற்று உரையாற்றிய கலைஞர் கருணாநிதி.. விண்ணைப்பிளந்த கோஷம்.. மு.க ஸ்டாலின் தடாலடி பேச்சு..! 

இயல்பு வாழ்க்கை முடங்கும் அச்சம்:

இந்த விசயத்திற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனை மாநில அரசு கண்டுகொள்ளாத நிலையில், அம்மாநில அளவில் எதிர்க்கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் நாளை (செப் 18) அன்று மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகும் சூழல் உண்டாகியுள்ளது. Periyar Birthday: "ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல.. புரட்சி செய்ய.." தந்தை பெரியார் பிறந்த தினம்..! 

பள்ளிகளுக்கு விடுமுறை:

ஆளுங்கட்சி முழு அடைப்பு இல்லை எனினும், நாளைய தினத்தில் பள்ளிகளுக்கு செல்லும் சிறார்களின் நிலையை கருத்தில் கொண்டு, அம்மாநில முதல்வர் ரங்கசாமி ஒன்றாம் வகுப்பு முதல் 08ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நாளை அம்மாநிலத்தில் பள்ளிகள் செயல்படாது. ஆட்டோ, பேருந்து போன்ற அத்தியாவசிய பயணங்களுக்கான சேவை பாதிக்கப்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.