3 Children Drowned: ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி; 2 பேர் உயிருடன் மீட்பு..!
பீகாரில் ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 08, சமஸ்திபூர் (Bihar News): பீகாரில் உள்ள ஜகத்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேர் புர்ஹி கந்தக் ஆற்றில் (Burhi Gandak River) நேற்று அதிகாலை குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அதில் 5 குழந்தைகள் நீரில் மூழ்கியுள்ளனர். உடனே அருகில் இருந்த உள்ளூர்வாசிகள் அதில் 2 சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர். மீதமுள்ள 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். Brinjal Benefits: கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பயன்கள்..!
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினருடன், உள்ளூர் நீர்மூழ்கிக் குழுவினர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர், நீரில் மூழ்கிய 3 குழந்தைகளை சடலமாக மீட்டனர். அந்த 3 சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக சமஸ்திபூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், பலியானவர்களில் மூன்று பேர், 12 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.