ஜூன் 08, சென்னை (Health Tips): கத்தரிக்காய் (Brinjal) உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் கத்தரிக்காய் என்று அழைப்பர். இந்தியா முழுவதும் இது 'பைகன்' (Baigan) என்று அழைக்கப்படுகின்றது. இது பல்வேறு வழிகளில் உணவாக கிடைக்கின்றன. பல நன்மைகளை அளிப்பதுடன், கத்தரிக்காய் உட்கொள்வது பாதுகாப்பானது ஆகும். கத்தரிக்காய் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இதில் பார்ப்போம்.
நினைவாற்றல்: கத்தரிக்காய்களில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைந்து உள்ளது, இது மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது. நம் உணவில் கத்தரிக்காயை சேர்த்துக்கொள்வது நினைவாற்றலையும், சிறந்த மன ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இந்த பைட்டோநியூட்ரியன்கள் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது. Danish PM Attack: டென்மார்க் பிரதமர் மீது திடீர் தாக்குதல்; மர்ம நபரை கைது செய்து விசாரணை..!
எலும்புகளின் ஆரோக்கியம்: கத்தரிக்காய்களில் இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. கத்தரிக்காயின் பளபளப்பான ஊதா தோற்றம் மற்றும் இந்த அழகான நிறத்திற்கு காரணமான பினாலிக் கலவைகள், வண்ணங்களைச் சேர்ப்பதை விட பலவற்றைச் செய்கின்றன. இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அறியப்படுகின்றது. கத்தரிக்காய் சாப்பிடுவது 'ஆஸ்டியோபோரோசிஸ்' போன்ற நோய்களுக்கு உதவும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்: கத்தரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மாங்கனீஸ் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றது மற்றும் நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றது. மேலும், புற்றுநோய் செல்களிலிருந்து நன்கு பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்கின்றது.
இரத்த சோகை: இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், கத்தரிக்காய் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. இதனை சாப்பிடுவதால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
உடல் எடைக்குறைப்பு: கத்தரிக்காயில் கொலஸ்ட்ரால் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால், உடல் எடையை அதிகரிக்காது. கத்தரிக்காய்களில் உள்ள நார்ச்சத்து நிறைந்த உள்ளடக்கம் நீண்ட காலத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.