Land Mine Explosion: கண்ணிவெடி தாக்குதல்; பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு..!
ஏப்ரல் 24, இம்பால் (Manipur News): மணிப்பூர் மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டம், இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலை 2-ல் உள்ள பாலத்தில் (Bridge On National Highway) கண்ணிவெடி வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பகுதியளவு பாலம் உடைந்தது. இதில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. Mysterious Gang Stabbed: திருவிழா கூட்டத்தில் கத்திக் குத்து; 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல்..!
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாலத்தை பார்வையிட்டார். உடனடியாக பாலத்தை சுற்றி வளைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இன்று அதிகாலை 12.45 மணியளவில் கண்ணிவெடி வெடித்து பாலம் சேதமடைந்துள்ளது. இதில், பாலத்தின் இரு முனைகளிலும் 3 பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், மணிப்பூரின் தலைநகர் இம்பால் திமாபூரை இணைக்கக்கூடிய பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லவதற்கான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், இம்பால் மேற்கு மாவட்டத்தில் 2 சமூகங்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூடு நடந்த சில மணிநேரங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.