Maharashtra Baby Dies due to Traffic (Photo Credit: @GemsOfMBMC X / @VarshaEGaikwad X)

செப்டம்பர் 20, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, வசாய் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக குழந்தை 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதனால் தலை, கை பகுதியில் காயமடைந்த குழந்தை, உடனடியாக பெற்றோர்களால் காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. அப்போது, சில கிமீ தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றடைய பதற்றத்துடன் பயணம் செய்துள்ளனர். அப்போது, வசாயில் உள்ள மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர். Anbu Karangal Scheme: அன்புக்கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? ரூ.2000 பெறுவதற்கு வழிமுறைகள் இதோ.! 

குழந்தை மரணம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வருத்தம்:

இதனால் கிட்டத்தட்ட 5 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டவர்கள், தாமதமாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விஷயத்துக்கு மருத்துவர் ஒருவர் அரசுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த தகவலால் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விஷயம் குறித்து பதில் அளித்துள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், "சம்பந்தப்பட்ட பகுதியில் மாநில அரசு மற்றும் போக்குவரத்து துறையினர் சார்பில் கனரக வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.