
ஜூலை 01, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரம் பகுதியில் சிகாச்சி கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ரியாக்டர் நேற்று வெடித்து சிதறிய நிலையில், பணியில் இருந்த 10 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Cockroach in Laddu: பிரபல கோவில் பிரசாதத்தில் கரப்பான்பூச்சி.. பக்தருக்கு ஷாக்.!
ரியாக்டர் வெடித்துச்சிதறி 42 பேர் பலி :
மேலும் 35 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களின் பலரின் நிலைமையும் கவலைக்கிடமான வகையில் இருந்ததால் பலி எண்ணிக்கை மொத்தமாக இதுவரை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அரசு சார்பில் இரங்கல் மற்றும் நிவாரண அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து தொடர்பான வீடியோ :
❗️💥 India: Massive Explosion at Industrial Area in Telangana - #ReactorBlast
More than a dozen people have been wounded in #Pashamylaram Industrial area - where rescue operations are ongoing. pic.twitter.com/65E8ZJ7FyQ
— RT_India (@RT_India_news) June 30, 2025